ஆண் மரபணுக்களை பல தடவை தம்மை மாற்றி, தம்மை சுமந்த உடம்பை மாற்றி, அதன் செயல் பாட்டையும் மாற்றி, அப்போதும் பெண் திருப்தி அடையவில்லையா? என்று உங்களுக்கு ஆட்சர்யமாக கூட இருக்கலாம். ஆனால் இயற்கையின் லாஜிக் இது தான்: ஒருவனுக்கு ஆண் குறி மிக நீளமாய் இருந்தும் விரைப்புறவே இல்லை என்றால்? அல்லது விரைப்பேற்பட்டும் அவனுக்கு பெண் ஆசையே இல்லை என்றால்? அல்லது ஆசை இருந்தும் சுயநலமாய் தன் சுகமே முக்கியம் என்று பெண்களை அவன் துஷ்பிரயோகம் செய்தால்? விந்தணுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் கருவுற முடியாத பாகத்தில் இவற்றை முதலீடு செய்யும் தன்மை அவனுக்கு இருந்தால்? இப்படிப்பட்ட ஆண்களை தேர்ந்தெடுப்பது சமூகத்திற்கு உபயோகமில்லாத செயலாகி விடுமே!
உதாரணத்திற்கு இவர்: அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவழியினர். அமெரிக்கராய் இருப்பதென்பதே ஏதோ ஓர் அரும் பெரும் சாதனை என்று நினைக்கும் அலட்டல் ஆசாமி. இவருக்கு திருமணமானது. முதலிரவன்றின் போது தலைவர் மனைவியை இழுத்து தன் எதிரில் மண்டி இட வைத்து, “வாயை திற” என்று அதட்ட, அவன் என்ன செய்ய முற்படுகிறான் என்று புரிந்து அதிர்ச்சியாகி மனைவி மறுத்து அழ, ஏகக்களேபரமாகி விட்டது. “இதுல என்ன இருக்கு, அமேரிக்காவுல இப்படி தான். பில் கிளிண்டனே இப்படி தான்” என்றான் அவன். “இப்படி எல்லாம் செய்தா குழந்தை பிறக்காது” என்றாள் மனைவி. “அதற்கு ஏன் கவலை படுகிறாய்? நான் ரொம்ப பெரிய சர்ஜனாக்கும், ஒரே ஒரு ஆப்பரேஷன் செய்து, உன் வாயிலிருந்து கர்பபைக்கும் நேரடியாக ஒரு கனெக்ஷன் கொடுத்து விடுகிறேன்” என்று அவன் தன்னம்பிக்கையோடு சொல்ல, “அயோ இப்படி ஒரு மட்டமான ஆளையா கட்டிக்கொண்டோம்?” என்று நொந்து போனாலும் தாலி செண்டிமெண்ட் தடுக்க, அவனை திருத்தி நல்வழி படுத்த அவள் அரும்பாடு பட, ஊகூம் கடைசி வரை அவனால் நார்மலாய் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியவே இல்லை. இந்த ஒரு ஆணை திருத்துவதிலேயே தன் ஒட்டு மொத்த வாழ்வை வீணடிக்க முடியாது என்று உணர்ந்து விவாகரத்து பெற்றூக்கொண்டு அவனிடமிருந்து தப்பினாள் மனைவி. இந்த பெண்ணாவது பரவாயில்லை, இன்னொரு பெண், முழுதாய் நான்கு ஆண்டுகள் இப்படி ஒரு ஆசாமியுடன் வாழ்ந்து, கடைசியில் பிள்ளை பிறக்கவில்லை என்று டாக்டரிடம் போனாள். டாக்டர் சொல்லி தான் அவளுக்கு தெரியும், அது வரை அவள் கணவன் அவளை செய்வித்தது நார்மல் செக்ஸே இல்லை என்று!
இப்படிப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாதென்றால் பெண்கள் படு உஷாராக அல்லவா ஆண்களை பதம் பார்த்து தரம் பிரித்தாக வேண்டும். வெறும், நீளம், நிமிர்வு, விந்தணு எண்ணிக்கையை வைத்து ஏதோ ஒரு பர்வர்ட்டுக்கு பிள்ளைகளை பெற்று விட்டு, இதனால் சமூக அமைதிக்கே கேடு ஏற்பட்டு விட்டால்? மோசமான ஆண் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு பிள்ளைகள் பெற்று தருவது தான் ஒரு பெண் செய்ய கூடியதிலியே மிகவும் பாவகரமான செயல் என்று எப்போதும் பெண்களை மட்டம் தட்டும், மனு ஸ்மிருத்தியே சொல்கிறதே. அது சரி, இவன் மனிதனா, மிருகமா, அல்லது ராஷ்சனா என்பதை ஒரு பெண் எப்படி தான் கண்டு பிடிப்பாளாம்?
வெரி சிம்பிள். நாம் ஏற்கனவே இந்த தொடரில் தெரிந்துக்கொண்டது தான். இந்த உலகிலேயே முகம் பார்த்து காமுறூம் மிருகங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று பொனோபோ, இன்னொன்று மானுடம். பொனோபோக்களை இப்போதைக்கு விட்டுவிட்டு, கலவிக்கொள்ளும் மனிதர்களை, குறிப்பாக அவர்களது முகங்களை மட்டும் கவனிப்போம். கலவியின் போது மனித பெண், பெரும்பாலும் மதி மயங்கி கண்களை மூடிக்கொண்டே தான் இருப்பாள். எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்! ஏன் நிஜ வாழ்விலும் நீங்கள் உங்கள் துணைவரோடு இருக்கும் தருணங்களை நினைத்து பாருங்கள்…. முத்தமிடும் போதுமே பெண்கள் கண்களை மூடிக்கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் ஆண்கள்? இரண்டு கண்களையும் அகல விரித்து வைத்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருப்பான்.
அது சரி, பெண் கண்ணை மூடுகிறாள், அப்போது தான் அவளால் ஸ்பரிசத்தை இன்னும் துல்லியமாய் உணர்ந்து மகிழமுடியும். இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்? மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே, இந்த மனித ஆண் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? ஆண்கள் அதிகம் பார்க்கும் பல பார்னோகிராபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடை பெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்த பாகம் மிக அதிக நேரத்திற்கு சித்தரிக்க படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லா கிளர்ச்சி பாகங்களையும் விட பெண்ணின் முகமே மிக அதிகமாய் திரையில் காட்ட படுகிறது என்று கண்டு பிடிக்க பட்டது! போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாய் பார்க்கிறானே இந்த மனித ஆண்! அதுவும் கலவியின் போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தை தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்கு கண் மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவதுண்டு, “இப்படி ஜடமாட்டம் இருக்கியே!” என்று அலுத்துக்கொள்கிறார்கள்.
ஏன் தெரியுமா? காரணம், மனித ஆணின் மூளை மற்ற மிருகங்களின் மூளையை போல செயல் படுவதில்லை. பிற மிருகங்கள் பெண்ணின் முகத்தை பாராமல் அவள் சுகிக்கிறாளா இல்லையா என்பதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், யந்திரகதியில் புணரும். ஆனால் மனித ஆணின் மூளையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பாட்டிருந்தது. கலவியின் போது பெண் சுகப்படும் காட்சியை தன் கண்களால் கண்டாலே ஒழிய அவனால் தன்னிறைவு பெறமுடியாது. இப்படி பெண் கிளர்ச்சியடையும் காட்சியை உற்று பார்ப்பதே ஆணுக்கு பெரிய சந்தோஷத்தை தருகிறது. காரணம் பெண்ணின் கலவியல் தேர்வு விதி: நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேண்ணா இருந்துக்க, ஆனா எனக்கு சுகம் தர தெரியலன்னா, நீ சுத்த வேஸ்டுடா, என்பதாகவே இருந்தது. இப்படி அவள் ரசனைகளை மதித்து, அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடுவதால், அவளை நாசுக்காக கையாள தெரிந்த ஆணின் மரபணுக்கள் மட்டுமே பரவுகின்றன. இது தான் சூட்சமம் என்று ஆனபின் ஆணீன் மரபணுக்கள் சும்மா இருக்குமா? பெண்ணை லாவகமாக கையாளும் விசையை ஆணின் மூளையில் புதிதாய் உருவாக்கின. பெண்ணை மகிழ்வித்தால் இந்த மூளை மையம் இன்ப ரசாயணங்களை சுரக்க ஆரம்பித்துவிடும், இதனால் ஆணுக்கு ஊக்கமும், கிளர்ச்சியும், தன் ஆண்மையின் மேல் கர்வமும் ஏற்படுகிறது. இவை அவனுக்கு பெரும் நிறைவை தர, ஒலிம்பிக்ஸில் முதலிடம் பிடித்தவனுக்கு ஏற்படும் வெற்றி களிப்பை இவன் ஒவ்வொரு முறை புணரும் போதும் பெறுகிறான். பெண் முகத்தில் சுகத்தின் சுவடி தெரிந்தால் மட்டும்.
அதனால் தான் பெரும்பாலான ஆண்கள் கலவி கொண்ட உடனே, பெண்ணிடம், “உனக்கு பிடிச்சதா? டிட் யூ என்ஜாய் இட்?” என்று கேட்கிறார்கள். அது கூலிக்காக கூட இருந்த விலைமாதுவாக இருந்தாலும் சரி. அவள் என்ஜாய் செய்தால் இவனுக்கு என்ன, செய்யவிட்டால் இவனுக்கு என்ன? சிம்பிள்: அவள் என்ஜாய் செய்யாவிட்டால் இவன் மூளைக்கு போதை கிடைப்பதில்லை. மாறாக, “எவ்வளவு மெனக்கெட்டும் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாளே” என்கிற இயலாமை தரும் ஆத்திரத்தை தான் தூண்டும்.
எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லையே. நான் முன்பு சொன்ன அமேரிக்க சர்ஜனை போன்ற பாலியல் குண்கோளாறு, perversion கொண்ட ஆண்களும் இருக்க தானே செய்கிறார்கள். அவ்வளவு ஏன், பெண்ணை பலவந்தமாய் கற்பழிக்கும் ஆண்களும் இருக்கிறார்களே………..என்றால், நிஜம் தான், இப்படிப்பட்ட ஆண்களும் உலகில் இருக்கிறார்கள். இவர்கள் பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி போனவர்கள். எந்த பெண்ணும் இப்படி பட்ட ஆண்களோடு கூட விரும்பவதே இல்லை. பலவந்தமாய் புணர்த்தபட்டாலும், மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத அந்த காலத்திலேயே பெரும்பாலான பெண்கள் இப்படி உருவாகும் கருக்களை கலைத்துவிடவே முயன்றிருக்கிறார்கள்….. காரணம் இப்படி பட்ட ஆண்களின் மரபணுக்கள் பரவுவதை இயற்கை அனுமதிப்பதில்லை.
-DR.SHALINI.www.linguamadarasi.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக