திங்கள், 28 மார்ச், 2011

சில குறும்படங்கள்

சமீபமாக இணையத்தில் நான் பார்த்த சில குறும்படங்கள் மற்றும் ஆணவப்படங்களின் இணைப்பு.
காந்தியைப் பற்றிய ஆவணப்படம்
காந்தியின் வாழ்க்கைவரலாறு குறித்த ஒரிஜினல் படக்காட்சிகளுடன் கூடிய அரிய காணொளி
MAHATMA – Life of Gandhi
http://www.youtube.com/watch?v=QCI3nswuYyc
தாகூர் பற்றிய ஆவணப்படம்
சத்யஜித் ரே இயக்கிய தாகூர் பற்றிய ஆவணப்படம், தாகூரின் 150ம் ஆண்டினை ஒட்டி நினைவு கொள்ள இதை அவசியம் காணவும்
Rabindranath Tagore by Satyajit Ray
http://www.youtube.com/watch?v=tDcnajUJ6_4
part2
http://www.youtube.com/watch?v=9JZiKdyJFwU
part3
http://www.youtube.com/watch?v=QdO16zlIYvw
part4
http://www.youtube.com/watch?v=wZwvbnZPpVE

கத்தரிக்காய்

அந்த வீட்டு எஜமானருக்கு கத்தரிக்காய் மிகவும் பிடித்துப் போனது. சமையல்காரர் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் மசாலா என்று போட்டு அசத்தி விட்டார். சுவைத்துச் சாப்பிட்டார் எஜமானர்.

சமையல்காரர் கூறினார்... "பிரபு, காய்களிலேயே உசத்தியானது கத்தரிக்காய்தான்." எஜமானர் கேட்டார், "அது எப்படி?" சமையல்காரர் பதில் சொன்னார். "அதன் தலையில்தானே கிரீடம் இருக்கிறது..." ரசித்து சிரித்தார் எஜமானர்.

சில நாட்களிலேயே கத்தரிக்காய் சலித்துப்போனது எஜமானருக்கு. அது தெரியாத சமையல்காரர் அதையே வழமைபோல் செய்து வைத்து விட்டார். கோபம் வந்து விட்டது எஜமானருக்கு. "இதெல்லாம் ஒரு காய் என்று வைக்கிறாயே?" என்றார். சமையல்காரர் சொன்னார், "ஆமாம் பிரபு, இருக்கிற காய்களிலேயே மோசமானது கத்தரிக்காய்தான்."

எஜமானர் கேட்டார், "அது எப்படி?" பதில் சொன்னார் சமையல்காரர்... "அதனால்தானே அதன் தலையில் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்." அசந்து போனார் எஜமானர்.

"சில நாட்களுக்கு முன்பு இதையே கிரீடம் என்றாய், இப்போது இப்படிச் சொல்கிறாயே?" சமையல்காரர் அமைதியாகச் சொன்னார், "பிரபு, நான் தங்களிடம்தான் வேலை பார்க்கிறேனே தவிர, கத்தரிக்காயிடம் அல்ல!"
நன்றி: siva

ஜென் குட்டிக் கதைகள்

குவளையைக் காலி ஆக்கு
ஜென் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான்-இன் என்ற ஜப்பானிய ஜென் குருவைப் பார்க்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் வந்தார். நான்-இன் அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரிக்க ஆரம்பித்தார்.
விருந்தினரின் குவளை முழுவதும் தேநீர் நிரம்பியது. ஆனால் இன்னும் அவர் தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார்.
தேநீர் ததும்பி வழிவதைப் பார்த்த பேராசிரியரால் பொறுக்க முடியவில்லை.
"இது நிரம்பி விட்டது. இதற்கு மேல் இந்தக் குவளையில் இடம் இல்லை"என்றார்.
நான்-இன் கூறினார், "இந்தக் குவளை போலவே நீங்களும் உங்கள் ஊகங்களினாலும் அபிப்ராயங்களினாலும் நிரம்பி இருக்கிறீர்கள். அதைக் காலி செய்யாதவரை உங்களுக்கு ஜென் என்றால் என்ன என்பதை நான் எப்படிப் புரிய வைக்க முடியும்?"
நன்றி: மஞ்சரி அக்டோபர் 2006

சிரமத்தில் சிக்கித்தவிக்கும்...

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது
http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும்.


3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.


4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
thanks, vikram.

சந்திராவின் சிரிப்பு

திருநெல்வேலியில் நான் இருக்கும் வரை எந்த சினிமாவுக்குப் போவது என்பதிலிருந்து எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்பது வரை எல்லாவற்றையும் எப்போதுமே குஞ்சுதான் முடிவு செயவான். பதின்வயதின் இறுதியில் ஓர் இலக்கில்லாமல் கண்ணில் தென்படுகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்தோம். இப்படியே போனால் சரியில்லை என்று ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் காதலிக்கத் தொடங்குவோம் என்றான் குஞ்சு. அப்படி அவன் தேர்ந்தெடுத்த பெண்தான் சந்திரா. சந்திரா எங்கள் காதலியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை குஞ்சு என்னிடம் சொன்னவுடனேயே நான் அவளைப் பார்க்கத் துடித்தேன். 'அவசரப்படாதே, சாயங்காலம் நாலரை மணிக்கெல்லாம் எங்க வீட்டு வாசல்ல நிப்போம். கரெக்டா க்ராஸ் பண்ணுவா. அப்போ காட்டுதென்' என்றான். சொல்லிவைத்த மாதிரி சரியாக நாலரை மணிக்கு கல்லணை ஸ்கூல் இள,கருநீல பாவாடை தாவணி யூனி·பார்மில் இரட்டை ஜடை போட்டு சிரித்தபடியே நடந்து வந்த சந்திராவை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன். இருந்தாலும் இந்த முறை பார்த்த போது காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்தது. இருந்தாலும் அவள் இனிமேல் எங்கள் காதலி அல்லவா? கோதுமை நிறத்திலிருக்கும் அவள் எங்களைக் கடந்து செல்லும் வரை ரொம்ப நாட்கள் பழகியவள் போல, கன்னத்தில் குழி விழச் சிரித்தபடியே சென்றாள். எனக்கு ஆரம்பமே நல்ல சகுனமாகத் தோன்றியது.

எங்கள் தெருவுக்கு மிக அருகில்தான் சந்திராவின் வீடு இருந்தது. இத்தனை நாளும் அந்த வீட்டை கவனிக்காமல் போனோமே என்றிருந்தது. ஆனாலும் கொஞ்சம் உதறல் எடுத்தது. காரணம், சந்திராவின் தகப்பனார் ராமையா பாண்டியன். அவர் ஒரு வஸ்தாது. கட்டப்பஞ்சாயத்துகளில் அதிக நேரம் செலவழிப்பவர். சொளவு சைஸில் கையில் பெரிய மோதிரம் போட்டிருப்பார். அதில் முத்தமிழறிஞர் சிரித்துக் கொண்டிருப்பார். ராமையா பாண்டியனுக்கும் அவரது ஆசைநாயகிக்கும் பிறந்த மகளே சந்திரா. அடிக்கடி சந்திராவின் வீட்டில் ஆசாரி வேலை நடந்து கொண்டிருக்கும். அவ்வப்போது ஒரு புது வாசற்கதவைப் பொருத்துவார் ஆசாரி. நள்ளிரவில் குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டும் ராமையா பாண்டியனுக்கு கதவைத் திறப்பதில்லை சந்திராவின் அம்மா. உடனே கதவை அடித்து நொறுக்கி உடைத்து உள்ளே சென்று விடுவார் ராமையா பாண்டியன். இத்தனைக்கும் அந்தக் கதவுக்கான சாவி அவர் சட்டைப்பையில்தான் இருக்கும்.

ராமையா பாண்டியனின் மகளை, அதுவும் அவர் ஆசைநாயகிக்குப் பிறந்தவளை நாம் காதலிப்பது நமக்கு சரிப்பட்டுவருமா என்று கவலையுடன் குஞ்சுவிடம் கேட்டேன். 'காதல்ன்னு வந்துட்டா வேற எதப் பத்தியுமே யோசிக்கக் கூடாது' என்றான். சரி நடப்பது நடக்கட்டும் என்று சந்திராவைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினோம். தினமும் காலையில் அவள் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பும் போது சரியாக அவள் வீட்டுக்கருகில் ஆளுக்கொரு சைக்கிளில் காத்து நிற்போம். நாளடைவில் நாங்கள் நிற்கிறோமா என்பதை சந்திராவே தேட ஆரம்பித்தது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. பின்னர் சைக்கிளை உருட்டியபடியே அவளுக்குப் பின்னாலேயே சென்று கல்லணை ஸ்கூல் காம்பவுண்ட் சுவர் வரை அவளை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு பிறகு சைக்கிளில் ஏறி நாங்கள் பள்ளிக்குச் செல்வோம். மாலையில் அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வேகமாக சைக்கிளை மிதித்து கல்லணை ஸ்கூல் பக்கம் மூச்சிரைக்கப் போய் நிற்போம். எங்களைப் பார்த்து சிரித்தபடியே சந்திரா வருவாள். அன்றைய இரவு இதைப் பற்றிய பல நினைவுகளோடு கழியும்.
சுமுகமாகச் சென்று கொண்டிருந்த எங்கள் காதலில் ஒரு வில்லன் புகுந்தான். அம்மன் சன்னதி பஜனை மடத்தில் சாய்ந்தபடி நானும், குஞ்சுவும் எங்கள் காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றிய தீவிரமான யோசனையில் இருந்தபோது லாரி ஓனர் சண்முகம் பிள்ளையின் மகன் மஹாதேவன் வந்தான். மஹாதேவன் பார்ப்பதற்குக் கொஞ்சம் போல்தான் ஆண் போல் இருப்பான். நடக்கும் போது ஆங்கில எழுத்து S போல ஒருமாதிரி வளைந்து நடப்பதால் அவனை S மஹாதேவன் என்றே அழைத்து வந்தோம். அவனது உண்மையான இனிஷியலும் S என்பதால் நாங்கள் அவனை கேலி செய்கிறோம் என்பதை அவன் உணர்ந்ததே இல்லை. நேரே எங்களிடம் வந்த S.மஹாதேவன் 'ஏல, சந்திரா பின்னால சுத்துறத விட்டுருங்க' என்றான். குஞ்சு எழுந்து நின்றான். 'என்ன சொல்லுதெ' என்றான். 'நான் அவளுக்கு கவிதல்லாம் எளுதிருக்கென். அவளுக்கு என்ன ரொம்பப் புடிக்கும்' என்று தொடர்ந்து சொன்னான். 'இத எதுக்குல எங்கக்கிட்ட வந்து சொல்லுதெ' என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டான் குஞ்சு. 'எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைச்சேளோலெ. ஆள வச்சு உங்க ரெண்டு பேரையும் அடிச்சு போடுவேன்' என்று S மஹாதேவன் சொல்லவும் குஞ்சு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். என் பங்குக்கு நானும் அவனை ஒரு அறை அறைய, எதுவும் பேசாமல் திரும்பிச் சென்ற S மஹாதேவன் கொஞ்ச தூரம் சென்று எங்கள் இருவருக்கும் இல்லாத எங்கள் மூத்த சகோதரிகளைத் திட்டிவிட்டு, 'என்ன நடக்கப்போதுன்னு பொறுத்திருந்து பாருங்கலெ' என்றான்.
இனிமேலும் நாம் தாமதிக்கக் கூடாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற குஞ்சு ஒரு வாழ்த்து அட்டை வாங்கினான். புதுவருட வாழ்த்து அட்டை அது. அதில் அழகாக தானும் கையெழுத்திட்டு, என்னையும் கையெழுத்து போடச் சொன்னான். ஸ்டைலாக என் பெயரை எழுதினேன். சந்திராவின் வீட்டு முகவரிக்கு போஸ்ட் பண்ணினோம். மறுநாளே அவளுக்குக் கிடைத்த விஷயம் எங்களுக்குத் தெரிய வந்தது. அன்று மாலை எங்களைக் கடந்து செல்லும் போது குவியலாக நாங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டையை எங்கள் முன்னே கீழே போட்டுவிட்டு எங்களைப் பார்த்து சிரித்துவிட்டும் சென்றாள் சந்திரா. நான் மனமுடைந்து போனேன். இந்த விஷயத்தில் எங்களுக்கு சீனியரான கணேசண்ணனிடம் போய் குஞ்சுவும்,நானும் கேட்டோம். 'அட கூறுகெட்ட குப்பானுகளா! ஏல, அவ என்ன பாஞ்சாலியா, ரெண்டு பேரும் அப்ளிகேஷனப் போட்டா அவ என்னல செய்வா? கிளிச்சுதான் போடுவா' என்றான் கணேசண்ணன். கணேசண்ணன் சொன்னதையும் விட வேதனையான விஷயம் அடுத்தமாதமே நடந்தது. வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு S மஹாதேவனுடன் சந்திரா ஊரை விட்டே ஓடிப் போனாள். பல ஊர்களில் சுற்றியலைந்து கொண்டிருந்த அவர்களை ஒருமாதிரியாக அவர்கள்வீட்டார் தேடி பிடித்தனர். சந்திராவின் படிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த ஒருசில வருடங்களில் இருவீட்டாரின் சம்மதத்துடன் S மஹாதேவன் - சந்திராவின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அன்று நாம் ஊரில் இருக்கக் கூடாது என்று என்னை குஞ்சு கன்னியாகுமரிக்கு இழுத்துச் சென்று விட்டான்.

கன்னியாகுமரியில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்து கண்ணீர் விட்டபடி 'வாள்க்கைங்கறது . . . .' என்று ஆரம்பித்து 'அந்தப் பிள்ள நம்மகூட எப்படியெப்படில்லாம் இருந்தா' என்றான். அவள் எங்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லையே என்று குழம்பினேன். இன்னும் என்னவெல்லாமோ குஞ்சு உளறினான். எனக்கும் அழுகை பொங்கி பொங்கி வந்தது. கால ஓட்டத்தில் நான் சென்னைக்கு வந்துவிட, குஞ்சு அவனது தொழிலில் மும்முரமாக, இருவருக்குமே திருமணமாகி பிள்ளை பிறந்து ஏதேதோ நடந்து விட்டது. சென்ற வருடத்தில் திருநெல்வேலி சென்றிருந்த போது எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு பெண்மணி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வர வர அந்த பெண் என்னையே பார்த்தபடி வருவதை உணர்ந்தேன். தன் குழந்தையை டியூஷன் அழைத்துச் செல்கிறாள் போலத் தெரிந்தது. என்னை நெருங்கவும் என் முகத்தைப் பார்த்து சிரித்தாள். சந்திராவேதான். அதே சிரிப்பு. அந்த கல்லணை ஸ்கூல் யூனிஃபார்மும், ரெட்டை ஜடையும் மட்டும்தான் இல்லை. நான் சந்தேகத்துடன் அவளது பார்வையைத் தவிர்த்து ஓரக்கண்ணால் பார்த்தேன். எவ்விதத் தயக்கமுமின்றி என்னைப் பார்த்து நன்றாக சிரித்தபடியே கடந்து சென்றாள். வீட்டுக்குள்ளிருந்து யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டேன். தெருமுனை திரும்பும் போது ஒரு முறை திரும்பி மீண்டும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள் சந்திரா. குஞ்சு அப்போது அவனது அலுவலகத்தில் இருந்தான். தாமதிக்காமல் உடனே அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.

'எல, நம்ம சந்திரா என்னயப் பாத்துச் சிரிச்சுக்கிட்டே போனா' என்றேன்.

'எந்த சந்திரா?' என்று கேட்டான் குஞ்சு.
written by சுகா 'வார்த்தை' செப்டம்பர் இதழ் www.venuvanansuka.blogspot.com

(அ)சைவம்

இன்றைக்கும் நான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, 'திரைப்படத்துறையில் இருந்து கொண்டு எப்படி நீங்கள் சைவமாக இருக்கிறீர்கள்?'. திரைப்படத்துறையில் நுழையும் போதே அசைவ உணவு சாப்பிடவும், மது அருந்தவும், எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிற மற்றொன்றை பழகவும் வகுப்பெடுப்பார்கள் என்றே பலரும் நம்புகிறார்கள். திரைத்துறையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலரும் நான் சைவ உணவுக்காரன் என்பதை ஆச்சரியமாக பார்ப்பார்கள். எனது வாத்தியார் பாலு மகேந்திராவும் கேட்டிருக்கிறார். அவரது சந்தேகம் கொஞ்சம் அதிகம்தான். 'ஒரு மனிதன் சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா என்ன?'. புதுச்சேரியில் அவருக்காக நல்ல அசைவ உணவைத் தேடி நாங்கள் இருவருமே நள்ளிரவில் அலைந்து கண்டுபிடித்த ஒரு உணவுவிடுதியில் அவர் மீனையும், நான் பழச்சாறையும் அருந்தும் போது இதை கேட்டார்.

பொதுவாக அசைவம் உண்பவர்கள் அந்த உணவின் மீது எந்த அளவுக்கு பிரியம், காதல், வெறி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தாலே அதிலும் கலோரி இருக்கிறது உடம்புக்கு ஆகாது என்று அநியாயத்துக்கு மற்றவர்களை பயமுறுத்துகிற நண்பர் ஜெயமோகனை சிக்கன் பெயரைச் சொல்லி ஏழிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை நடத்தியே கூட்டிச் சென்றுவிடலாம். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் திடீரென்று தானும் என்னை போலவே சைவமாகிவிட்டதாக சொன்னார்.அசைவம் சாப்பிட்டு சலித்துவிட்டதனாலேயே சைவத்துக்கு மாறிவிட்டதாகக் காரணமும் சொன்னார். 'சரி, எத்தனை நாட்களுக்கு சைவமாக இருப்பீர்கள், உங்கள் மேல் நம்பிக்கை இல்லையே' என்றேன். 'அது என் கையில் இல்லை. சைவ உணவு வகைகளின் கைகளில் உள்ளது. என்னை திருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவைகளின் பொறுப்பு' என்றார். சரியாக ஒரு மண்டலத்தில் சைவ அணியிலிருந்து கௌரவமாக விலகி தாய்க் கழகத்துக்கே திரும்பி விட்டார்.

சைவம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அசைவம் உண்பவர்கள் அருகில் உட்கார்ந்து உணவருந்துவதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை. அதற்கு காரணம் சிறுவயதிலிருந்தே அசைவம் சாப்பிட்டு வருகிற நண்பன் குஞ்சுதான். திருநெல்வேலியில் குஞ்சு போய் விரும்பி அசைவம் சாப்பிடும் கடையின் பெயர் 'வைர மாளிகை'. திருநெல்வேலி சைவ வேளாளர்கள் மற்றும் குஞ்சுவைப் போன்ற சுத்தமான பிராமணர்களின் ஏகோபித்த ஆதரவினால் வைர மாளிகைக்கு இப்போது பாளையங்கோட்டையில் ஒரு கிளை திறந்துவிட்டனர்.

எனக்கு தெரிந்து திருநெல்வேலியிலும், இலங்கையிலும் மட்டுமே 'சொதி' என்னும் குழம்பு உள்ளது. முழுக்க முழுக்க தேங்காய்ப் பாலில் தயாராகும் சொதி, திருநெல்வேலி சைவ வேளாளர் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும். திருமணத்துக்கு மறுநாள் மறுவீட்டுப் பந்தியில் சொதி பரிமாறப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. 'அதென்ன, கல்யாணத்துக்கு வந்துட்டு சொதிச் சாப்பாடு சாப்பிடாம போறிய?' என்று திருமண வீட்டார் உறவினர்களிடம் சொல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதற்கு வெள்ளைவெள்ளேரென்று காணப்படும் சொதியில் கேரட், உருளைகிழங்கு மற்றும் முருங்கைக்காய் போட்டிருப்பர் . தொட்டுக் கொள்ள கண்டிப்பாக இஞ்சிப் பச்சடி உண்டு. அப்போதுதான் சொதி ஜீரணமாகும். சென்னைக்கு வந்த புதிதில் எழுத்தாளர் வண்ணநிலவன், வாத்தியார் இருவருடனும் சென்று சரவணபவன் போய் இடியாப்பமும், சொதியும் சாப்பிட்டிருக்கிறேன். (வண்ணநிலவன் ' சொதி ' என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியுள்ளார்). வாத்தியார் எனக்காக ஒருமுறை வீட்டில் அவர் துணைவியாரை சொதி வைக்கச் சொன்னார். ஆசையுடன் சாப்பிடப் போனேன். ஆனால் சாப்பிடத்தான் முடியாமற்போயிற்று. அகிலா அம்மையார் நன்றாகத்தான் சொதி வைத்திருந்தார்கள். இரண்டே இரண்டு மீன் துண்டுகளை அதில் போட்டிருந்தார்கள்.

அசைவ உணவுவகைகளின் மத்தியில் அமர்ந்து சைவம் சாப்பிடுவதில் சங்கடப்படாத என்னால் மீனின் வாடையை மட்டும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாலிகிராமத்தில் ஒரு மீன் மார்க்கெட் உள்ளது. அதை கடந்து செல்லும் போதெல்லாம் எனக்கு குமட்டிக் கொண்டுவரும். முன்பெல்லாம் அதைத் தாண்டி செல்லும் போது கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு, முகத்தையும் வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விறுவிறுவெனச் செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. காரணம், ஒரு முறை அப்படி செல்லும் போது கவனிக்காமல் நேரே மீன் வாங்க வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் மீது மோதிவிட்டேன். பார்ப்பதற்கு கல்லூரிக்குச் செல்லும் நவநாகரீகத் தோற்றத்தில் இருந்த அந்தப் பெண், சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாங்கமே தாராளமாக அனுமதித்திருக்கிற பிரத்தியேக வசைச் சொல்லான அந்த மூன்றெழுத்து வார்த்தையை சொல்லி என்னை திட்டினாள். அதற்கு பதிலாக நான் போய் ஒரு கிலோ
மீனே வாங்கியிருக்கலாம்.

நண்பர் சீமானின் குழுவினர் அசைவம் உண்பதை கிட்டத்தட்ட ஓர் யாகம் போலவே செய்வர். பொழுது போகவில்லையென்றால் உடனே அசைவ விருந்துக்கு ஏற்பாடு நடக்கும். சமைப்பதற்கு ஒரு தெருவும், பின் சாப்பிடுவதற்கு ஓர் ஊரும் திரண்டுவரும். அவர் வீட்டுத் தோட்டத்தில் முதலில் ஒரு பெரிய அண்டா வந்து இறங்கும். பின் ஊர்வன, பறப்பன இத்யாதிகள். மீனுக்கு ஒரு இடம், ஆட்டுக்கு வேறு இடம், கோழிக்கு தனியாக மற்றொரு இடம் என்று தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளிலிருந்து எல்லாம் வந்து சேரும். சீமானே எல்லோருக்கும் தொலைபேசியில் அழைத்துச் சொல்வார். என்னிடம் 'அய்யா மகனே . . உங்களுக்கு மட்டும் சிறப்பா சைவ உணவு தயாரா இருக்கு வந்திருங்க . ' என்பார். (சைவ உணவு என்றால் வேறொன்றுமில்லை. கொஞ்சம் அப்பளம் பொரித்திருப்பார்கள். அவ்வளவுதான்). மற்றவர்களுக்கு 'மறக்காம மதிய உணவுக்கு வந்திருங்க. இன்னிக்கு நம்ம வீட்டுல உப்புக்கறி'. மேற்படி உப்புக்கறி வைப்பதில் சீமானின் தம்பிமார்களில் ஒருவனான ஜிந்தா நிபுணன். பார்ப்பதற்கு செக்கச்சிவப்பாக இருக்கிற அந்த உப்புக்கறியை கண்கலங்க மூக்கைத் துடைத்துக் கொண்டே அனைவரும் உண்டு மகிழ்வர். அமரர்கள் ஏவி.மெய்யப்பச் செட்டியார், எல்.வி.பிரசாத், நாகிரெட்டியார் போன்ற பெரியவர்களைத் தவிர சீமான் வீட்டு உப்புக்கறியை ருசி பார்க்காத திரையுலகப் பிரபலங்களே இல்லை எனலாம்.

இன்னதானென்றில்லாமல் என்னவெல்லாமோ சீமானின் வீட்டில் சமைக்கப்படும். கௌதாரிப் பறவையிருந்து பன்றி வரை அவர்கள் மெனுவில் வஞ்சகமில்லாமல் எல்லா உயிரினத்துக்கும் இடமுண்டு. ஒரு முறை கேட்டேன்.

'ஏன் அராஜகம் . . எல்லா எளவையும் சாப்பிடுறியளே. . . விதிவிலக்கே கிடையாதா'. .

'என்ன இப்படி கேட்டுட்டியெ அய்யா மகனே . . மனுசக் கறி சாப்பிடுறதில்லையே . . . சட்டப்படி தப்புங்குற ஒரே காரணத்துக்காகத்தானே இவனையெல்லாம் விட்டு வச்சிருக்கோம் . . . வெட்டி சாப்புட்டா தம்பி நல்லாத்தான் இருப்பான்' . .

படுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஜிந்தாவைப் பார்த்து சொன்னார். அடுத்த வாரத்தில் ஜிந்தா தன் ஜாகையை மாற்றிக் கொண்டான்.

அசைவப் பிரியரான நண்பர் செழியனை சீமானின் விருந்தோம்பல் ஒருமுறை தலைதெறிக்க ஓட வைத்தது. காலையில் சீமானை சந்தித்துவிட்டு கிளம்பிய செழியனிடம் சீமான் அன்பொழுகச் சொல்லியிருக்கிறார்.

'செல்லம் . .. மதியம் சாப்பிட வராம போயிறாதீய . . . உங்களுக்காக கொரங்கு

வத்தல் வறுக்கச் சொல்லியிருக்கேன்'.
written by சுகா ,’வார்த்தை’ அக்டோபர் இதழ் ,www.venuvanamsuka.blogspot.com

Giant வீல்

அரசுப் பொருட்காட்சி பொதுவாக திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆனிமாதம்தான் நடத்தப்படும்.வேறு பொழுதுபோக்குக்கு வழியேயில்லாத நெல்லை மக்கள் பொருட்காட்சிக்கு தினமும் வருவார்கள்.குறிப்பாக பெண்களுக்கு அபூர்வமாக வெளியே சுற்றும் தருணம் வாய்ப்பதால், பார்த்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் பார்ப்பதில் அலுப்பு ஏற்படுவதில்லை.தேரோட்டம் பார்ப்பதில் கூட அவர்களுக்கு அவ்வளவு ஆர்வமிருக்காது.வைகாசி மாதமே அவர்களிடம் பொருட்காட்சி பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிடும்."எக்கா,இந்த வருசமாவது பொருள்காட்சி போடுவானா . . இல்ல போன வருசம் மாதிரி த்ராட்டுல விட்டுருவானா" . . . . "இந்த வருசம் கண்டிப்பா உண்டுமாம் . . ஒங்க அத்தான் சொன்னா . . ."

பொருட்காட்சித் திடலில் சாமான்கள் வந்து இறங்கி பந்தல் வேலைகள் ஆரம்பமான உடனேயே ஊருக்குள் உற்சாகம் பரவ ஆரம்பித்து விடும்.குற்றால சீஸனும்,ஆனித்திருவிழா கொண்டாட்டங்களும்,பொருட்காட்சியும் திருநெல்வேலி ஊரை வேறு ஊராக மாற்றிவிடும்.பணமுள்ளவர்கள் பொருட்காட்சிக்குள் ஸ்டால் எடுப்பார்கள். வேலையில்லாத இளைஞர்கள்,வயதுப் பெண்கள் அந்த தற்காலிக ஸ்டால்களில் வேலை செய்வார்கள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பொருட்காட்சி நடக்கும் இடத்தை ராட்சத ராட்டினம் என்னும் Giant wheel காட்டிக் கொடுத்து விடும்.அப்போதைய முதல்வரின் ஆளுயர கட்டவுட்டுக்கள் பொருட்காட்சித் திடலின் நுழைவுவாயிலில் நம்மை வரவேற்கும்.பொருட்காட்சியில் மட்டுமே நாங்கள் காணக் கிடைக்கிற பேல் பூரி,பானி பூரி வகையறாக்கள் வாசனையோடு சுண்டி இழுக்கும்.பானி பூரிக்கு ஆசைப் பட்டு,எது பேல் பூரி,எது பானி பூரி என்ற வித்தியாசம் தெரியாமல், வருடா வருடம் மிகச்சரியாக பேல் பூரியை வாங்கி திணறலோடு தின்போம்.

"இன்றோடு சென்றுவிடு",வசந்தத்தைத் தேடி" போன்ற நாடகங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்.டில்லி அப்பளம் வாங்கி தின்றபடியே நடந்து செல்பவர்கள் போகிற போக்கில் அந்நாடகங்களை ஒரு பார்வை பார்த்த படி செல்வர்.எல்லா அரசுத் துறை அரங்குகளிலும் வேகவேகமாக சுற்றி விட்டு வெளியே வரும் இளைஞர்கள்,சுகாதாரத் துறையில் மட்டும் அதிக நேரம் செலவிடுவர்.குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சில மருத்துவ புகைப்படங்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.வேளாண்துறை பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீலிசிவம்,என்னத்த கன்னையா போன்ற டிரேட்மார்க் நடிகர்கள் நடித்த அரசாங்கக் குறும்படங்கள் பார்ப்பாரின்றி ஓடிக் கொண்டிருக்கும்.குறிப்பாக ஹெரான் ராமசாமி நடித்த குமரிக்கண்டம் விளக்கப் படம் போடும் பகுதியில் ஜனநடமாட்டமே இருக்காது.

அம்மாவுக்கு எப்போழுதுமே பொருட்காட்சிக்கு போனால் giant wheelஇல் ஏறி சுற்ற ஆசை.தைரியமெல்லாம் கிடையாது.பல்லைக் கடித்துக் கொண்டே பயந்தபடி அந்த த்ரில்லை அனுபவிக்க வேண்டும் அவளுக்கு.தான் பயந்தாலும்,பயப்படும் மற்றவர்களை கேலி செய்வதும் உண்டு.அம்மா இறந்த பிறகு அவள் நினவாகத்தானோ என்னவோ எனக்கும் giant wheel மேல் ஒரு காதல்.Giant wheelஇல் ஏறிச் சுற்றுவது போக யார்யாரெல்லாம் பயப்படுகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

சுந்தரம்பிள்ளை பெரியப்பா கமிஷன் கடை வைத்திருந்தார்.சிவதீக்ஷை எடுத்திருந்ததால் தினமும் சிவ பூஜை பண்ணுபவர்.உட்கார்ந்தால்,எழுந்தால்,படுத்தால் சிவநாமம்தான்.கழுத்து வழியாக போடும் அந்த கால தொள தொள சட்டையும்,வேஷ்டியும்தான் உடை.அசப்பில் டி.எஸ்.பாலையா மாதிரியே இருப்பார்.வேர்க்கும் போதெல்லாம் 'V' cut உள்ள சட்டையின் கீழ்ப் பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்து விசிறியாக மேல் நோக்கி வீசிக் கொள்வார். சின்னப் பையனான என்னை பொருட்காட்சிக்கு அழைத்து போகும் பொறுப்பை ஒரு நாள் அவர் ஏற்றுக் கொண்டார்.கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எல்லா அரங்குகளுக்கும் சென்றோம்.இந்து,அறநிலையத் துறையில் மட்டும் அதிக நேரம் ஆனது.மரணக்கிணறு பார்த்தே தீர வேண்டும் என்றார்."உயிரைக் கொடுத்து மோட்டார் ஸைக்கிள் ஓட்டுதான். . . அவனுக்கு துட்டு குடுத்தா புண்ணியம். . ." பக்கத்திலேயே giant wheel.என் முகத்தை பார்த்து என் ஆசையை புரிந்து கொண்டார்.நிறைய செலவழித்து விட்டாரே என்று நானாக கேட்கவில்லை.
"ராட்டுல ஏறணுமாடே" . . . . .

"பரவா இல்ல பெரியப்பா வேண்டாம்" . . .

"அதான் உன் மூஞ்சியே சொல்லுதே . . .வா ஏறுவோம் . . .பயப்பட மாட்டயே . . . . . ."
Giant wheelஇல் ஏறும்வரை பேசிக் கொண்டிருந்த பெரியப்பா,ஏறி அமர்ந்தவுடன் 'சிவாயநம' என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.சுற்ற ஆரம்பிக்கும் முன்பே கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார்.ஆட்கள் நிறைந்தவுடன் பெல் அடித்து சுற்ற ஆரம்பித்தது.ஒரு சுற்றிலேயே பெரியப்பா கதறலுடன் ". . ஏ . . ..நிறுத்து . . .சின்னப்பையன் பயப்படுதான்" என்றார்."எனக்கு ஒண்ணும் பயமில்ல பெரியப்பா . . ஜாலியாத்தான் இருக்கு" . . . "எல . . .நிறுத்தப் போறியா இல்லியால" . . . .ராட்டுக்காரனுக்கு காதில் விழவில்லை."எல . .அய்யா . .நல்லாயிருப்ப . . .கூட துட்டு தாரேன் . . .எறக்கி விடு" . . . வெட்கத்தை விட்டு லேசாக அழுது பார்த்தார்.வேகம் எடுத்தது.இனி கத்தி பிரயோஜனமில்லை என்பது தெரிந்து போனது.கீழிருந்து மேலே போகும்போது சிவநாமமும்,மேலிருந்து கீழே வரும் போது மலச்சிக்கல் முக்கலுமாகத் தொடர்ந்தார்.சுற்று முடிந்தது.சிரிப்பை அடக்கியபடி உட்கார்ந்திருந்தேன்.ஆட்கள் இறக்கப்பட்டனர்.சரியாக நாங்கள் அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்கு வந்து நின்றது.பெரியப்பா என்னை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்க்கும் விதமாக உர்ரென்று அமர்ந்திருந்தார்.முகமெல்லாம் வேர்த்து திருநீறு அழிந்திருந்தது.மற்ற நேரம் என்றால் சட்டையை பிடித்து விசிறிக்கொள்வார்.இப்போது சிக்கென்று கம்பியை பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்.சுற்று முடிந்த நிம்மதி முகத்தில் தெரிந்தது.ஆனாலும் பதற்றம் குறையவில்லை.மனிதர் அவமானப் பட்டுவிட்டார்.நாம்தான் சரி செய்ய வேண்டும் என்று மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

பெரியப்பா . . . அங்கே பாத்தேளா . . . நெல்லையப்பர் கோயில் தெரியுது . . .

சிவப்பழமான பெரியப்பா கடும் எரிச்சலுடன் சொன்ன பதில்.

ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பாக்கல.
- சுகா ,www.venuvanamsuka.blogspot.com