சனி, 26 மார்ச், 2011

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 8,9,10 மாதங்கள்


இந்த மாதமும் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். யூரின் பரிசோதனையும் செய்துக்கனும்.கிருமித் தொற்று இருக்கானு பாக்கனும்.
இப்போ உங்க செல்லத்துக்கு 2கிலோக்கு மேல் எடை கூட ஆரம்பிச்சிருக்கும்

வாரக் கணக்குப்படி 
32வது வாரம் முதல் 8வது மாதம் 36வது வாரம் முதல் 9ஆவது மாதம்.
இப்போ முதலே நீங்க என்ன குழந்தை அதுக்கு என்ன பேர் வைக்கலாம் அப்டினு யோசிச்சுட்டிருப்பீங்க  இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ,பி,சி,,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா தொடர்ந்து எடுத்துக்கனும்.
இனிமே படுக்க ரொம்ப சிரமமா இருக்கும். எப்பவுமே இடது புறமா திரும்பி வயிற்றின் மேலே உங்களோட எடை இல்லாத மாதிரி படுக்கனும். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும், சீரான சுவாசத்துக்கும் நல்லது. கழுத்து வலிக்கும் போது வலது பக்கமா திரும்பிக்கலாம்.
இனிமே நீங்க உங்க அம்மினாய்டிக் திரவ அளவ சீரா வெச்சிக்கனும். பிரசவ காலம் வரை நான் சொன்ன சீரக கசாயம் குடிக்குறது நல்லது.
கேழ்வரகு கூழ், சத்து மாவு கூழ் குடிக்கிறதும் ரொம்ப நல்லது.
இனி நீங்க நல்லா முன்ன விட‌ நல்லா நடங்க. அப்புறம் வெண்ணீர் வெச்சி இடுப்பு, கால் தசைப் பகுதிகள்ல நல்லா ஊற்றி விட மறக்காதீங்க.
நல்லா உதை வாங்குறீங்களா? இரவு படுக்கும் முன்னாடி அடி வயிற்றுல விளக்கெண்ணெய் தேய்ச்சிட்டுப் படுங்க. உடல் சூட்டைத் தணிக்கும். இனிமே இளநீர் அதிகம் அடிக்க வேண்டாம் அது அதிகமான சுண்ணாம்பு நிறைந்தது செல்லத்துக்கு ஒத்துக்காது.
அதிகமா குலுங்கி பயணம் செய்றது, தொலை தூர பேருந்து மற்றும் இரு சக்கர வாகனப் பயணம், வேகமான நடை இதெல்லாம் கூடாது.
இப்போ உங்க குழந்தை பிறந்தா நல்லா படியா இருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்க பிரசவ வலி பற்றி அவசியம் தெரிஞ்சிக்கனும். அதுக்கு பயப்படவே தேவை இல்லை. உங்க செல்லத்தப் பாக்கப் போற அந்த நேரம், கடவுளுடைய படைப்ப இந்த உலகத்துக்குக் கொண்டு வரப் போற அந்த நேரம் நீங்களும் புதுசாப் பிறக்கப் போற அந்த நேரம், பிஞ்சுக் கால் கைகள தொடப்போற அந்த நேரம், உங்கத் திருமணப் பரிசா ஒரு உன்னதப் பூங்கொத்த உங்களவருக்குக் கொடுக்கப் போற அந்த நேரம், உங்க அம்மாவ தெய்வமா நீங்க உணரப் போற அந்த நேரம், ஒரு புனிதமான நேரம்!!! வாழ்க்கைல அதிக அளவு மகிழ்ச்சியான நேரம்!!!உங்கப் பிறப்போட அர்த்தம் உங்களுக்கு புரியிற நேரம்!!!!
அதுக்காக காத்திருக்க ஆரம்பிங்க. அது உங்களுக்கு மட்டும் வலி இல்லை. குட்டி பாப்பாக்கும் வெளிய வரும் போது வலிக்கும்ல. நீங்க இப்போ தைரியமா இருந்தா தான் பாப்பாவும் தைரியமா இருக்கும்.
இடுப்புப் பகுதிகளில் வலி அதிகமா இருக்கும்। அதிகமா மூச்சிறைக்கும். உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் வலிக்கும். கடைசியா பிரசவ வலி வரும். அது பல விதமா வரலாம். இடுப்பு, வயிறு முழுதும், அடி வயிறு,இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு அப்டினு வலி எங்க வேணுனா துவங்கலாம். முடிவு நல்லதா இருக்கும்.
                                             


                                       - www.aagaayanathi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக