சனி, 26 மார்ச், 2011

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 4,5வ‌து மாதங்கள்


இப்போ உங்கள் வயிறு நல்லாவே வெளியே தெரிய ஆரம்பிக்கும்
கடுமையான வாந்தி, தலை சுற்றல் பெரும்பாலானோருக்குக் குறையும். சிலருக்கு குறையாது
பசியோட அளவு இன்னும் அதிகரிக்கும். வழக்கம் போல நான் கடந்த முறை சொன்ன உணவு வகைகள் எல்லாம் தொடர்ந்து சாப்பிடுங்க.
இந்த மாதம் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். அதுக்குக் தகுந்த மாதிரி உணவு முறையை அமைச்சுக்கலாம்.
இப்போ உங்க செல்லத்துக்கு நல்லா காது கேக்க ஆரம்பிச்சுடும். அதுனால நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். மனசை மகிழ்ச்சியா வெச்சிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதுக்கூட பேச ஆரம்பிங்க. ஆனா இப்பவே பாடம் சொல்லிக்குடுக்காதீங்க பாவம்.
இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ,பி,சி,,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா எடுத்துக்கனும்.
மற்றபடி மருதுவர் ஆலோசனைப் படி நடந்துக்கோங்க.
சோனோகிராம் ஸ்கேன் செய்றது நல்லது। அது குழத்தையோட உடல முழுவதுமா பார்த்து ஏதேனும் ஊனம் இருக்கானும், பிளாசென்டா வளர்ச்சி எப்படி இருக்குனும் சொல்லிடும். மற்றபடி எல்லாமே கடந்த மாதங்களில் சொன்னதேதான்.
                                    -www.aagaayanathi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக