சனி, 26 மார்ச், 2011

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: முதல் 3 மாதங்கள்

சகோதரி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.உங்கள் நண்பி எப்படி உள்ளார்.
பொதுவாகவே குழந்தை உண்டான உடன் நம்முடைய உடலில் நிறைய மாற்றங்கள் வரும்.வாந்தி வருவது போல் இருக்கும் ஆனால் வராது
சில சமயம் வாந்தி வந்து கொண்டே இருக்கும் எதும் சாப்பிட முடியாது சாப்பிட்டால் உடனே வாந்தி வந்துவிடும்
நம்மால் சாதாரண சமயம் இருப்பது போல் இருக்க இயலாது அதும் முதல் 3 மாதங்கள் சொல்லவே வேண்டாம் ரெம்பவும் அசதியாக இருக்கும்.
சில சமயம் அதிகமாக தூக்கம் வரும் சில சமயம் தூக்கமே வராது இன்னும் இந்த மாதிரி நிறைய இருக்கும்.
இது கஷ்டமாக இருந்தாலும் ஒரு வித சுகம் ஏன் என்றால் எல்லாவிதமான கஷ்டத்தயும் தாங்கி கொண்டுதான் ஒரு தாய் குழந்தையையை பெற்று எடுக்கிறாள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த 10 மாதம் வரை எல்லாவற்றையும் தாங்கி அவள் காத்திருந்து குழந்தையை பெற்ற பின் அந்த பிள்ளையை பார்த்தவுடன் அவளுடைய எல்லா கஷ்டமும் மறந்து போய்விடும்.
இது எல்லாம் நான் எதுக்கு உங்களிடம் சொல்கிறேன் என்றால் உங்கள் நண்பியால் சாப்பிட முடியவில்லை வாந்தி வருவது போல் இருக்கிறது என்று எதையும் சாப்பிடாமல் இருந்து விடவேண்டாம். வாந்தி வந்தால் வரட்டும் இருந்தாலும் சாப்பிடவும் சில சமயம் சாப்பிடும் போது குமட்டுதல் இருந்தால் புளிப்பானது எதையாவது சிறிது சாப்பிட்டு கொள்ள சொல்லவும். ஊறுகாய் அல்லது உங்கள் நண்பிக்கு பிடிச்சது எதுவோ அதை சாப்பிட சொல்லவும் டென்ஷனாக இருக்ககூடாது எப்பொழுதும் ரிலாக்ஸாக இருக்கனும்.
ஜூஸ் குடிக்கனும் டயர்டாக இருக்கும் போது ஜூஸ்கள் குடித்துவரலாம்,ஆரஞ்சு ஜூஸ்,குமட்டுதலுக்கு எழுமிச்சை பழத்தை நுகர்ந்து வரலாம் அதன் மணம் குமட்டுதலை குறைக்கும்.
வயிற்றை மட்டும் எப்பொழுதும் காலியாக போட்டுவிட கூடாது உள்ளே ஒரு உயிர் இருக்கிறது அதற்க்கு தேவை என்று சாப்பிட முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சாப்பிடனும்.
வாழைப்பழம் சாப்பிடலாம் பொதுவாக இந்த சமயத்தில் மலசிக்கல் வரும் அதனால் தினமும் இரவு படுக்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாம்.
பிஸ்கட் சாப்பிடலாம்.கேக் ,ஐஸ் க்ரீம் இது எல்லாம் அவர்களுக்கு பிடித்து இருந்தால் சாப்பிடட்டும்.ஏன் என்றால் எல்லா கர்பிணி பெண்களுக்கும் ஒரே போன்று எல்லாம் பிடித்து விடாது.
நான் குழந்தை உண்டாகி இருக்கும் போது நிறைய ஜூஸ் ,ஐஸ் க்ரீம் தான் சாப்பிட்டேன். ஆனால் என் தோழி ஒருவர் குழந்தை உண்டாகி இருக்கும் போது இதை எல்லாம் தொடவே மாட்டார் வாந்தி வருவது போல் இருக்குது என்பார்.அதனால் உங்கள் தோழிக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடட்டும்.
சிலருக்கு இனிப்பாகவே பிடிக்கும்.சிலருக்கு காரமாகவே பிடிக்கும்.இன்னும் சிலருக்கு புளிப்பாகவே பிடிக்கும் .
அதனால் உங்கள் தோழியை வயிற்றை மட்டும் காலியாக வைக்க வேண்டாம்.காலையில் பால் மட்டும் குடித்தால் போதாது கொஞ்சமாவது டிபன் ஏதாவது சாப்பிட சொல்லவும்.
அவர்களுக்கு எது பிடிக்கும் காரமாகவா அல்லது இனிப்பாகவா அல்லது புளிப்பாகாவா என்று சொல்லவும் நான் அதுக்கு தகுந்தது போல் எது எல்லாம் சப்பிடலாம் என்று சொல்கிறேன்.
சாப்பிட கூடாது என்றால் எனக்கு தெரிந்தது அன்னாசி பழமும்,முந்திரி பழமும் (க்ரேப்ஸ்) ,பேரீதம் பழம் சூடு என்பார்கள் அதாவது மலச்சிக்கல் வரும்
மாதுளை பழம் சாப்பிடலாம் பால் நிறைய குடிக்கவும் முக்கியமாக தண்ணீர் அதிகமாக அருந்தவும்.
வயிற்றை சாப்பிடாமல் காயப்போட்டால் வயிற்றுவலி வந்து விடும்.பசிக்கவிடாமல் எதையாவது சாப்பிடவும்.
சாப்பிட நேரம் ஆகிவிட்டால் இடையில் பிஸ்கட்டாவது சாப்பிடனும் .இல்லை என்றால் வாயு தொல்லை ஏற்பட்டு விடும் அதனால் கவனமாக இருக்க சொல்லவும்.
எனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன் மேலும் எதுவும் சந்தேகம் என்றால் கேட்கவும்.
                                                                          www.aagaayanathi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக