வெள்ளி, 25 மார்ச், 2011

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்






உப்புள்ள பண்டம் குப்பையிலே!

உங்கள் உணவில் உப்பு அதிகம் சேருகிறதா? கருவாடு, உப்புக்கண்டம், உருளைக்கிழங்கு சிப்ஸ், உப்பு அல்லது மசாலா வேர்க்கடலை, முட்டை, இறைச்சி வகைகள், உப்பு அதிகம் சேரும் கார்ன்ஃப்ளாக்ஸ் என்ற சோளவறுவல் முதலியவற்றை விரும்பி உண்ணுகிறீர்களா?

உடனடியாக உப்பு சேர்த்து சமைப்பதைத் தவிரித்துவிடுங்கள்.

வடக்கு கான்பெராவில் உள்ள குன்னவால் என்ற இடத்தில் வசிக்கும் 37 வயதுக்காரர், ரிச்சர்ட் ஜோன்ஸ். 1998 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மூக்கில் இருந்து இரத்தம் ஒழுக திகைத்துப் போனார். நன்கு ஆரோக்கியமாக உள்ளவர். 1998 ஜுலையில் மீண்டும் இரத்தம் மூக்கிலிருந்து! ஆனால், இந்த முறை இரத்தம் நிற்கவில்லை. எனவே, மருத்துவமனையில் சேர்ந்தார்.

அவரது இரத்த அழுத்த அளவு 120/80 என்பதற்குப் பதிலாக 170/100 என்றிருந்து. எனவே, மாத்திரைகளுக்குப் பதிலாக இவரது வாழ்க்கை முறை மாற்றப்பட்டது.

மாலை நேரங்களில் டி.வி. முன்னால் அமர்ந்து கொண்டு பீர், சிப்ஸ், முட்டை, பன்றி இறைச்சி, சீஸ் முதலியவற்றை சாப்பிடுவதை அடியோடுவிட்டார். உப்பு இல்லாத உணவுத்திட்டத்திற்கு திரும்பினார். ஸ்டிரோக் அல்லது இறப்பிலிருந்து மீண்டு விட்டார்.

எல்லோருக்கும் இரத்தக் கொதிப்பு இருந்தால், இப்படி வெளிப்படையாக மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகாது. உணவில் உப்பு அதிகம் சேரச் சேர இரத்தக் குழாய்கள் தடித்துப் போகின்றன. இதனால், இரத்தம் பாயும் அளவு குறைகிறது. இதைச் சரி செய்ய இதயம் அதிக அழுத்தத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது. உப்பு அதிகம் சேர்வதால் இரத்தம் கெட்டியாகி, பாய்வதும் தாமதப்படுகிறது. இதனால் அதிக இரத்த அழுத்த நோய் ஏற்பட்டு மாரடைப்பு, ஸ்டிரோக், வயிற்றுப் புற்றுநோய் முதலியவையும் ஏற்படுகின்றன. அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதே உப்பின் தலையாய பணி.

உப்பு நிறையச் சேர்த்துக் கொள்பவர்களின் உடலில் கூடுதலாக இரண்டு லிட்டர் தண்ணீர் (உடலில்) இருக்கிறது. இதன்மூலம் உடல் எடையில் இரண்டு கிலோ அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம், உடல் எடை, மதுப் பழக்கம், இவற்றிற்கு இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது என்று 32 நாடுகளில், பத்தாயிரம் பேர்களின் உடல் நிலையை ஆராய்ந்தார்கள். உப்பு குறைவான உணவு சாப்பிடுகிறவர்களின் சிறுநீரில் சோடியம் அளவு குறைவாக இருந்தது. இரத்த அழுத்தமும் குறைவாக இருந்தது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளான அபார்ஜைன் மக்கள், பழங்களும் காய்கறிகளும் சாப்பிட்ட போது இரத்த அழுத்தம் நன்றாக இருந்தது. அவர்கள் உப்பு சேர்த்து சமைத்துண்ண ஆரம்பித்ததும் இரத்த அழுத்தம் ஏறிவிட்டது.

எனவே, இனி, உப்பில்லாத பண்டங்களை வயிற்றுக்குள் போடுவதுதான் வாழ்நாளை அச்சமின்றி நீடித்துத் தரும்! உப்பு சேர்த்து சமைத்த உணவுகளை குப்பையில் போடும் காலம் வந்துவிட்டது. உப்பு அதிகம் உள்ள டின் உணவுகள், டின் சாஸ் வகைகளை தொடவே தொடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக